ஓமலூர்: உணவு பூங்கா அமைக்க 11.5 ஏக்கர் நிலம் தேர்வு
ஓமலூர், காடையாம்பட்டி பகுதியில் 11 புள்ளி 5 ஏக்கர் பரப்பளவில் 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உணவு பூங்கா அமைக்கப்படவுள்ளது.
ஓமலூர், காடையாம்பட்டி பகுதியில் 11 புள்ளி 5 ஏக்கர் பரப்பளவில் 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உணவு பூங்கா அமைக்கப்படவுள்ளது. இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை ஆய்வு செய்த அதிகாரிகள், ஆய்வறிக்கையை தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தனர். இந்த இடத்தை நபார்டு வங்கி ஆய்வு செய்த பின் உணவுப்பூங்கா அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.