திருச்சியில் ஜார்க்கண்ட் மாணவி தற்கொலை? - உயிரிழப்பு குறித்து போலீசார் விசாரணை
திருச்சியில், ஜார்க்கண்ட் மாநில மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கே.கே.நகர் அடுத்த கே.சாத்தனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த ஜெப்ரா பர்வீன், முதலாம் ஆண்டு உணவியல் துறை படித்துவந்தார். இந்நிலையில், அவர் தங்கியிருந்த அறையில்,
தூக்கில் சடலமாக தொங்கினார். விரைந்து வந்த கே.கே.நகர் போலீஸார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தியில் படித்த மாணவி, ஆங்கிலவழியில் படிக்க முடியாத நிலையில் தற்கொலை செய்து கொண்டதாகவும், மொபைல்ஃபோன் பயன்படுத்தியதால், எழுந்த பிரச்சினை காரணமாகவும் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.