நீட் விலக்கு : "மீண்டும் மசோதா" - ஸ்டாலின் கோரிக்கை
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி, குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெற வேண்டும் என, தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி, குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெற வேண்டும் என, தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தமிழக சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடரை கூட்டி, இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். தமிழக மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் இதுவரை இழைத்த மாபெரும் துரோகம் போதும் எனக் குறிப்பிட்ட ஸ்டாலின், நீட் தேர்வை ஏன் திரும்ப பெறக் கூடாது என்ற உயர்நீதிமன்ற கேள்விக்கு, தமிழக அரசு பதிலளிக்காமல் மவுனம் காப்பது கண்டனத்திற்குரியதாகும் என்றார். எனவே, மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் கொடிய "நீட்" தேர்வு அடுத்து வருவதற்குள், இப்போதே அவசர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.