கணவன் இறந்த துக்கத்தில் மனைவி பலி : மரணத்திலும் இணைபிரியாத 100 வயது தம்பதி

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குப்பகுடியை சேர்ந்த 104 வயது முதியவர் வெற்றிவேல் இன்று காலை உயிரிழந்த நிலையில், அந்த செய்தியை கேட்ட அதிர்ச்சியில் அவரது மனைவி 100 வயதான பிச்சாயி மாரடைப்பில் மரணமடைந்தார்.

Update: 2019-11-12 15:26 GMT
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குப்பகுடியை சேர்ந்த 104 வயது முதியவர் வெற்றிவேல் இன்று காலை உயிரிழந்த நிலையில், அந்த செய்தியை கேட்ட அதிர்ச்சியில் அவரது மனைவி 100 வயதான பிச்சாயி மாரடைப்பில் மரணமடைந்தார். மரணத்திலும் இணை பிரியாத இந்த தம்பதிக்கு அந்த பகுதி மக்கள் அஞ்சலி செலுத்தினர். 100 வயதை கடந்த இந்த தம்பதிக்கு 6 பிள்ளைகள், 23 பேரன்கள், கொள்ளு பேரன்கள் உள்ளனர். 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்ததால் உறவினர்கள் வேதனையடைந்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்