கொடைக்கானல் ஏரியில் தனியார் படகு போக்குவரத்துக்கு தடை

கொடைக்கானல் படகு குழாமில் மறு உத்தரவு வரும் வரை தனியார் படகுகளை இயக்க தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-11-05 12:35 GMT
கொடைக்கானல் ,சீனிவாச புரத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவர் உயர் நீதி மன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார். 
அதில் கொடைக்கானல் ஏரியில் ஒப்பந்த காலம் நிறைவடைந்த நிலையில், சட்ட விரோதமாக தற்போது படகு குழாம் இயக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது, அப்போது மறு உத்தரவு வரும் வரை கொடைக்கானல் படகு குழாமில் படகு போக்குவரத்துக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்