செந்தில்பாலாஜி வெற்றியை எதிர்த்து வழக்கு : மனுவை மீண்டும் விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம்
செந்தில் பாலாஜியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் அவர் தொடர்ந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணையை மீண்டும் உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது
2016 ல் அரவக்குறிச்சி தேர்தலில் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றதற்கு எதிராக கீதா என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. ஆனால் மீண்டும் நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதால் மனுவை விசாரிக்க தேவையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வருவதாக செந்தில்பாலாஜி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜியின் கோரிக்கையை ஏற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கீதா தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும் ஏற்கனவே முடித்து வைக்கப்பட்ட செந்தில் பாலாஜியின் மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்