ராமநாதபுரம் : ஊரணிக்கு நீர்வரத்து - தூர் வாரிய இளைஞர்கள்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் அங்குள்ள ஊரணி வறண்டு காணப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் அங்குள்ள ஊரணி வறண்டு காணப்பட்டது. ஊரணிக்கு நீர் வரும் கால்வாய்கள் தூர்ந்து போன நிலையில் அவற்றை அப்பகுதி இளைஞர்கள் தூர்வாரினர். இதையடுத்து ஊரணி தற்போது நிரம்பி வருகிறது. இளைஞர்களின் முயற்சிக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.