செலவை குறைத்து வருவாயை பெருக்க காக்னிசன்ட் முடிவு

செலவை குறைக்கும் காக்னிசன்ட் நிறுவனத்தின் நடவடிக்கையால் இந்திய மென்பொருள் வல்லுநர்கள் அதிகளவில் பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.

Update: 2019-11-01 09:03 GMT
நியூஜெர்சியை  தலைமையிடாக கொண்டு செயல்படும் காக்னிசன்ட் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி Brian Humphries பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அதன்படி, அந்த நிறுவனம், சிக்கன நடவடிக்கையின் மூலம் வருமானத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது. 

இதன் ஒரு பகுதியாக நிறுவனத்தில் பணியாற்றும் நடுத்தர மற்றும் சீனியர் பிரிவைச் சேர்ந்த 10 முதல் 12 ஆயிரம் ஊழியர்களை, தற்போதுள்ள பொறுப்பிலிருந்து விடுவிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் 5 ஆயிரம் பேரை மீண்டும் பணி அமர்த்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சில பணிகளைச் செய்துகொடுக்கிறது. அந்தப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, 2020 முதல் சில வணிக நடவடிக்கைகளை  குறைத்துக் கொள்ளவும் காக்னிசன்ட் முடிவெடுத்துள்ளது. இதனால் ஆறாயிரம் ஊழியர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

காக்னிசன்ட் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்பதால் இந்த சிக்கன நடவடிக்கையால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இந்தியர்களாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்