கீழடியை போன்று பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு : 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என தகவல்

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கீழடியை போன்று, பழங்கால சுடுமண் சிற்பம் உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-10-16 09:23 GMT
காளையார்கோவிலை அடுத்த இலந்தைகரை வேளார்மேடு பகுதியில் மரங்களை அகற்றியபோது பழங்கால சுடுமண் சிற்பங்கள், கல் பாசிகள், சோழர் கால நாணயங்கள், பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட ஓடுகள், சுடுமண் அணிகலன்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டு உள்ளது. சிரியாவில் 6 ஆம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்த தங்க நாணயமும் கிடைத்துள்ளது. இதனை ஆய்வுசெய்த தொல்லியல்துறை அதிகாரிகள், இந்த  பொருட்கள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் பெரிய நதி ஓடியதற்கான அடையாளம் உள்ளதாக தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள், இங்கு நகர நாகரீகம் இருந்ததற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே இப்பகுதியில் விரிவான அகழாய்வு நடத்த வேண்டுமென, தொல்லியல் துறையினருக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்