"வன்னியர்கள் தூக்கியெறிய கறிவேப்பிலையா?" - ஸ்டாலினுக்கு ராமதாஸ் கேள்வி
தேர்தலின் போது தி.மு.க. கொண்டாடவும், தேர்தலுக்குப் பிறகு தூக்கி எறியவும் வன்னியர்கள் என்ன கறிவேப்பிலையா? என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேர்தலின் போது தி.மு.க. கொண்டாடவும், தேர்தலுக்குப் பிறகு தூக்கி எறியவும் வன்னியர்கள் என்ன கறிவேப்பிலையா? என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்படும், மறைந்த முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் உள்ளிட்ட ஏராளமான வெற்று வாக்குறுதிகளை ஸ்டாலின் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதியில் வைப்புத் தொகை கூட வாங்க முடியாதோ என்ற அச்சத்தில், பொய் வாக்குறுதிகளை ஸ்டாலின் அளித்து உள்ளார் எனவும் ராமதாஸ் சாடியுள்ளார். வன்னியருக்கு மட்டும் கிடைக்க வேண்டிய 20 சதவீத இட ஒதுக்கீட்டை, 108 சமூகங்களுக்கு பகிர்ந்து வழங்கி துரோகம் இழைத்தவர் கருணாநிதி என்றும் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.