நீட் ஆள்மாறாட்ட முறைகேடு விவகாரத்தில் ஜாமின் கோரிய மனு - நாளை விசாரணை
நீட் ஆள்மாறாட்ட புகாரில் கைதான மாணவர்கள், அவர்களின் தந்தைகள் ஆகியோர் ஜாமின் கோரிய மனு நாளை தேனி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த உதித்சூர்யா, பிரவீன், ராகுல் மற்றும் இவர்களது தந்தைகள் வெங்கடேசன், சரவணன், டேவிஸ் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மாணவர் இர்பானும், அவரின் தந்தை முகமது சபி ஆகியோரும் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டனர். மாணவர்கள் உதித்சூர்யா, பிரவீன், ராகுல் மற்றும் அவர்களின் தந்தைகள் ஜாமின் கோரிய மனு நாளை தேனி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதே போல், சேலம் சிறையில் உள்ள மாணவன் இர்பானை தேனிக்கு மாற்றக் கோரும் சி.பி.சி.ஐ.டி. போலீஸின் மனு நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது. இர்பான் தேனி சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டவுடன், நீதிமன்ற உத்தரவு பெற்று, காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். மாணவன் இர்பான் வாய் திறந்தால், நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில், மேலும் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.