கீழடி ஆய்வு: "மத்திய அரசு அனுமதிக்காமல், ஆய்வு செய்ய முடியாது" - வழக்கறிஞர் கனிமொழி

கீழடியில் ஆய்வை தொடர மத்திய அரசின் அனுமதியில்லாமல், ஆய்வை மேற்கொள்ள முடியாது என வழக்கறிஞர் கனிமொழி தெரிவித்தார்

Update: 2019-10-06 23:56 GMT
தமிழர்களின் நாகரீக வரலாறு 6 ஆயிரம் ஆண்டுகள் முந்தையது என்பது கீழடியில் கிடைத்த ஆதாரங்கள் மூலம் தெரியவந்திருப்பதாக வழக்கறிஞர் கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னையில், சமூக ஊடக செயற்பாட்டாளர் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், கீழடி ஆய்வு வெளிவர காரணமாக இருந்த வழக்கறிஞர் கனிமொழி மற்றும் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ஆகியோர் பேசினர். கீழடி ஆய்வு பொருட்களை ஏன் பெங்களூரு கொண்டு செல்ல வேண்டும் என்ற கேள்விதான், வழக்கு தொடுக்க காரணம் என்று வழக்கறிஞர் கனிமொழி குறிப்பிட்டார். கீழடியில் ஆய்வை தொடர விரும்பவில்லை என கூறிய கனிமொழி, மத்திய அரசின் அனுமதியில்லாமல், ஆய்வை மேற்கொள்ள முடியாது என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்