மேகதாதுவில் அணையை கட்ட கர்நாடக அரசை அனுமதிக்க கூடாது - மத்திய அரசுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசிடம் ஆலோசனை நடத்த வேண்டியதில்லை என மத்திய அரசுக்கு கர்நாடக அரசு தெரிவித்திருப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-10-06 14:22 GMT
மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசிடம் ஆலோசனை நடத்த வேண்டியதில்லை என மத்திய அரசுக்கு கர்நாடக அரசு தெரிவித்திருப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இரு மாநில மக்களின் நல்லுறவை கருத்தில் கொண்டு, மேகதாதுவில் அணை  கட்டும் திட்டத்தை கைவிடுமாறு கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி அளிக்க கூடாது என்றும் மத்திய அரசை ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்