கொலை வழக்கு - 2 பேருக்கு ஆயுள் தண்டனை : பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
திருவாரூர் மாவட்டம் பரவக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் 2005ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம் பரவக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் 2005ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் நீதிபதி செந்தூர் பாண்டி தீர்ப்பு வழங்கினார். இதில் குற்றம்சாட்டப்பட்ட இளங்கோவன், அமுதரசன், ஆகிய இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.