"பண்பாட்டுப் பெருமைகளை பாதுகாப்பது நமது கடமை" - திமுக தலைவர் ஸ்டாலின்

பண்பாட்டுப் பெருமைகளை பாதுகாப்பது நமது கடமை என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2019-09-28 10:58 GMT
தொல்தமிழர் பெருமையைப் பறைசாற்றும் அகழ்வாய்வுப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், கீழடியில் நான்காம் கட்ட ஆய்வு தொடர்பாக  தொல்லியல்துறை வெளியிட்ட அறிக்கைக்கு உடனடியாக பாராட்டு தெரிவித்ததாக கூறியுள்ளார். கீழடியில் இதற்கு முன்பு மத்திய தொல்லியல் துறை நடத்தியுள்ள 3 கட்ட ஆய்வு முடிவுகளையும்  வெளியிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கீழடி மட்டுமின்றி, ஏற்கனவே ஆய்வு மேற்கொள்ளப்பட்ட ஆதிச்சநல்லூர் குறித்த ஆய்வு முடிவுகளையும் தொல்லியல் துறை வெளியிடவேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கீழடியில் மட்டுமல்ல, தமிழர்கள் பல பகுதிகளிலும் சிறப்பான நாகரிகத்தையும் செவ்விய பண்பாட்டையும் கடைப்பிடித்து, உலகத்திற்கே முன்னோடியாக விளங்கியவர்கள் என்றும் ஸ்டாலின் தெரிவித்தள்ளார். அந்தப் பண்பாட்டுப் பெருமைகளை மீட்பது மட்டுமல்ல, அதனைப் பாதுகாப்பதும் நமது கடமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்