குரூப் 2 தேர்வில் மொழிப் பாடங்கள் நீக்கப்பட்டிருப்பது தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதி - வைகோ

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வில் மொழிப் பாடங்கள் நீக்கப்பட்டிருப்பது தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதி, என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-28 10:15 GMT
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வில் மொழிப் பாடங்கள் நீக்கப்பட்டிருப்பது தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதி, என்று மதிமுக பொதுச்செயலாளர்   வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பணியாளர் தேர்வு ஆணையம் உடனடியாக புதிய பாடத்திட்ட தேர்வு முறையை திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், அரசுப் பணிகளில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களை நுழைக்க டி.என்.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தையே அரசு மாற்றி அமைக்க முனைந்துள்ளதாவும் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்