அ.தி.மு.க தேர்தல் செலவு கணக்கு சமர்பிப்பு - கூட்டணி கட்சிகளின் செலவு விவரங்கள் அறிக்கையில் இல்லை என தகவல்

மக்களவை, 22 தொகுதி இடைத்தேர்தலில், கூட்டணி கட்சிகள் செலவு விவரங்களை அ.தி.மு.க தமது அறிக்கையில் தெரிவிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2019-09-28 04:44 GMT
மக்களவை, 22 தொகுதி இடைத்தேர்தலில், கூட்டணி கட்சிகள் செலவு விவரங்களை அ.தி.மு.க தமது அறிக்கையில் தெரிவிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க. சமர்ப்பித்துள்ள தேர்வு செலவு கணக்கு அறிக்கையில், வரைவு மற்றும் காசோலை மூலம் கட்சிக்கு 61 புள்ளி 8 கோடி ரூபாய் நன்கொடை பெறப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. நட்சத்திர பேச்சாளர்கள் பிரசார பயணத்திற்கு, 72 புள்ளி நான்கு மூன்று  லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. மக்களவை மற்றும் 21 சட்டசபை தொகுதிகள் இடைத்தேர்தலில், ஒட்டு மொத்தமாக 19 புள்ளி ஒன்பது ஐந்து கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக அ.தி.மு.க தெரிவித்துள்ளது. 


Tags:    

மேலும் செய்திகள்