டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்கும் கால‌ அவகாசம் ஒரு ஆண்டாக குறைப்பு - உடனடியாக அமல்

தமிழகத்தில் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி டிரைவிங் லைசென்சை புதுப்பிக்கும் கால அவகாசம் ஒரு ஆண்டாக குறைக்கப்பட்டு உள்ளது .

Update: 2019-09-25 22:01 GMT
தமிழகத்தில் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி டிரைவிங் லைசென்சை புதுப்பிக்கும் கால அவகாசம் ஒரு ஆண்டாக குறைக்கப்பட்டு உள்ளது. டிரைவிங் லைசென்சை புதுப்பிக்கத் தவறினால் அதை புதுப்பிக்க 5 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டது. அது தற்போது ஒரு ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது. தவறினால் மீண்டும் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். இந்த புதிய நடைமுறை தமிழகம் முழுவதும் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்