தமிழக ஜவுளித்துறையில் 12 லட்சம் பேர் வேலை இழப்பு - இறக்குமதி செய்யப்படும் ஜவுளியால் உற்பத்தி பாதிப்பு

தமிழக ஜவுளித்துறையில் 12 லட்சம் பேர் வேலைவாய்ப்பு இழந்துள்ளதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது.

Update: 2019-09-24 06:54 GMT
நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலை காரணமாக தமிழகத்தின்  ஜவுளி உற்பத்தி துறையில் 30 சதவீத தொழிற்சாலைகள் முடங்கியுள்ளதாக இந்திய ஜவுளி சம்மேளனம் கூறியுள்ளது.  இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் ராஜ்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  பங்களாதேஷ் நாட்டில் இருந்து  இறக்குமதி செய்யப்படும் ஜவுளிப் பொருட்களை தடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். வங்கி கடனை மறு ஆய்வு செய்ய வலியுறுத்திய நிலையில், அது தொடர்பான நடவடிக்கைகளை மத்திய ஜவுளி அமைச்சகம் எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.  இந்தியாவில் தேவைக்கு அதிகமாக உற்பத்தியாகும் நூலினை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் ராஜ்குமார் கேட்டுக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்