விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் - "தீபாவளி பரிசு பொருட்களை கொண்டு செல்ல கட்டுப்பாடு"

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 2 தொகுதிகளுக்கு தீபாவளி பரிசு பொருட்களை உரிய ஆவணங்களுடன் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-23 10:12 GMT
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டபேரவை தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 21 ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி சென்னை 
தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை 
தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு, இடைத்தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் தயார்  நிலையில் இருப்பதாகவும், 
இது குறித்து  விழுப்புரம் மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர்களுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார். தேர்தல் செலவின பார்வையாளர்கள், துணை ராணுவ படையினர் தொகுதிக்கு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.  2 தொகுதிகளிலும் தலா 3 பறக்கும் படையினரும், 3 நிலைக்கண்காணிப்பு குழுவினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று அவர் தெரிவித்தார். இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 2 தொகுதிகளுக்கு தீபாவளி பரிசு பொருட்களை  உரிய ஆவணங்களுடன் மட்டுமே கொண்டு  செல்ல வேண்டும் என்று அவர் தெரிவித்தார். ஆவணங்கள் இல்லாவிட்டால் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அவர் கூறினார். விக்கிரவாண்டி தொகுதியில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 456 வாக்காளர்களும், நாங்குநேரியில்  2 லட்சத்து 57 ஆயிரத்து 42 வாக்களர்களும் உள்ளதாக சத்ய பிரத சாஹு தெரிவித்தார். விக்கிரவாண்டி தொகுதியில் 275 வாக்குவாசவடிகளும், நாங்குநேரி தொகுதியில் 299 வாக்குசாவடிகளும்  அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்