தூத்துக்குடி மாவட்டத்தில் 7 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 40 காவலர்கள் அதிரடி மாற்றம்

தூத்துக்குடி மாநகரில் நடைபெறும் தொடர் கொலைகள் எதிரொலியாக, 7 ஆய்வாளர்கள் உள்பட 40 காவலர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2019-09-20 05:34 GMT
நெல்லை  சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். தூத்துக்குடி மாநகரில், கடந்த 2 மாதத்தில் சுமார் 19 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இது போன்ற குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்கு சட்ட ஒழுங்கு குறைபாடு மற்றும் காவலர்களின் கவனக்குறைவே காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து, கொலை சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், பல்வேறு நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டனார். பணியின் போது கவனக்குறைவாக இருந்ததாகக் கூறி சிறப்பு உதவி ஆய்வாளர் உள்பட 5 போலீசாரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். 2-வது கட்டமாக தற்போது, 7 ஆய்வாளர்கள் உள்பட 40 காவலர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்