"காலாண்டு தேர்வு விடுமுறை உண்டு" : பள்ளி கல்வித்துறை அறிவிப்பால் மாணவர்கள் தெளிவு

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகளை பள்ளிகளில் நடத்தினாலும், ஏற்கனவே அறிவித்தபடி காலாண்டு தேர்வு விடுமுறை உண்டு என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Update: 2019-09-16 10:53 GMT
மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழாவை, சிறப்பாக  கொண்டாடுவதற்கு, வரும் 23 ஆம் தேதி முதல், அக்டோபர்  2ம்தேதி வரை பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடத்த அட்டவணை வழங்கப்பட்டுள்ளது. கட்டுரை, கவிதை, சொற்பொழிவு, பட்டிமன்றம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை ஒவ்வொரு நாளும் நடத்த வேண்டும் என்றும், பள்ளிகளில் இந்நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதை, மாநில திட்ட இயக்ககத்துக்கு அனுப்ப வேண்டும் என, கல்வித்துறை, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் காந்தியின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடத்த வேண்டுமென மத்திய இடைநிலை கல்வி திட்டத்தின் மாநில இயக்குனர் வெளியிட்ட அறிக்கையால், காலாண்டு தேர்வு விடுமுறை உண்டா இல்லையா என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கடும் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி காலாண்டு தேர்வு விடுமுறை உண்டு என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார். பள்ளிகளில் நடைபெறும் காந்தி பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் விருப்பமுள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்கலாம் என்றும் கட்டாயம் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் குழப்பம் தீர்ந்தது. 
Tags:    

மேலும் செய்திகள்