இந்தியாவின் அடையாளமாக இந்தி ஒருபோதும் திகழாது - அமித்ஷாவின் கருத்துக்கு ராமதாஸ் கடும் எதிர்ப்பு

இந்தியாவின் அடையாளமாக இந்தி ஒருபோதும் திகழாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-14 11:21 GMT
இந்தியாவின் அடையாளமாக இந்தி ஒருபோதும் திகழாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி அமைந்திட வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், இந்தி திணிக்கப்பட்டால் நாடு பிளவுப்படும் என்று எச்சரிக்கை விடுத்ததோடு, பிற மாநிலங்களின் அடையாளங்களை பறிக்க முயல்வது தவறுதானே என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்