கயிற்றால் கழுத்தை இறுக்கி 8 வயது சிறுமி கொலை - குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைப்பு

பாலியல் தொந்தரவு செய்து 8 வயது சிறுமியை கழுத்தை இறுக்கி கொலை செய்த சம்பவம் மூணாறில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-09-13 08:43 GMT
கேரள மாநிலம் மூணாறு அருகே , குண்டுமலை தனியார் தேயிலை தோட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி தங்கி வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம், எஸ்டேட் வேலைக்கு சென்ற நிலையில், அவர்களது 8 வயது மகளும், வயதான தாயாரும் வீட்டில் இருந்துள்ளனர்.  சிறுமியின் பாட்டி அருகில் உள்ள வீட்டிற்கு சென்றுவிட்டு,  சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தபோது, சிறுமி கழுத்தில் கயிறு இறுகிய நிலையில்  கட்டிலில் கிடந்துள்ளார். ஊஞ்சல் விளையாடும்போது கயிறு இறுகியிருக்கலாம் என உறவினர்கள் நம்பிய நிலையில்,  உடல்கூறு ஆய்வில் அவர் பாலியல் தொந்தரவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த போலீசார், குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்