களைகட்ட தொடங்கிய ஓணம் பண்டிகை : அத்தப்பூ கோலமிட்டு, நடனமாடி கொண்டாட்டம்
கேரளாவின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தில் களைகட்ட தொடங்கியுள்ளது.
கேரளாவின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தில் களைகட்ட தொடங்கியுள்ளது. கல்லூரிகளில் மாணவிகள் ஓணம் பண்டிகையை அத்தப்பூ கோலமிட்டு, நடனமாடி விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். கடந்த 2ஆம் தேதி தொடங்கிய ஓணம் பண்டிகை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஒணம் பண்டிகையின் முக்கிய நாளான திருவோணம் தினம் வரும் 11ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கேரள மாநில எல்லை என்பதாலும், மலையாள மொழி பேசும் மக்கள் அதிகம் இருப்பதாலும், குமரி மாவட்டத்தில் ஒணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டும் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன.