அமைச்சர் கே.சி. வீரமணிக்கு பாராட்டு விழா : திருப்பத்தூரை மாவட்டமாக அறிவித்ததற்கு வரவேற்பு
திருப்பத்தூர் மாவட்டமாக அறிவிக்கப்பட்டதற்காக அமைச்சர் கே.சி. வீரமணிக்கு 38 சங்கங்கள் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டமாக அறிவிக்கப்பட்டதற்காக அமைச்சர் கே.சி. வீரமணிக்கு 38 சங்கங்கள் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது. திருப்பத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற இந்த விழாவில், கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவரும் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.சி. வீரமணி, திருப்பத்தூரை தனி மாவட்டமாக கொண்டு வர , மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் பல முறை கோரிக்கை வைத்ததாகவும், தமது கனவு, தற்போது தான் நிறைவேறி உள்ளதாகவும் தெரிவித்தார்.