மணல் விலை ரூ.5000-இல் இருந்து ரூ.14,000-ஆக உயர்வு

மணல் தட்டுப்பாடு காரணமாக ஒரு யூனிட் விலை, ஐந்தாயிரம் ரூபாயில் இருந்து 14 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளதாக மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் கண்ணையன் தெரிவித்தார்.

Update: 2019-08-31 18:46 GMT
மணல் தட்டுப்பாடு காரணமாக ஒரு யூனிட் விலை, ஐந்தாயிரம் ரூபாயில் இருந்து 14 ஆயிரம்  ரூபாயாக உயர்ந்துள்ளதாக  மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் கண்ணையன் தெரிவித்தார். சேலத்தில் நடைபெற்ற சங்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மணல் கடத்தல் தொடர்பான வழக்குகள் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு இந்த வழக்குகளுக்கு தீர்வு கண்டு பழையபடி ஆற்றுப்படுகைகளில் மணல் அள்ளுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
Tags:    

மேலும் செய்திகள்