பள்ளி கல்வித்துறை சார்பில் கல்வி தொலைக்காட்சி : முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் தொடங்கப்பட்ட கல்வி தொலைக்காட்சியின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

Update: 2019-08-26 08:56 GMT
மாணவ-மாணவிகளின் கற்றல் திறனை வளர்க்க இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வி துறைக்கு என தனி தொலைக்காட்சி தொடங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதையொட்டி 5 கோடி ரூபாய் செலவில் ஸ்டுடியோ உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. அதன் துவக்க விழா சென்னை கோட்டூர்புரத்தில் இன்று நடைபெற்றது. சபாநாயகர் தனபால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், செங்கோட்டையன் உள்ளிட்ட மூத்த  அமைச்சர்கள் விழாவில் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், மாணவர்களுக்குள் பல ஆயிரம் திறமைகள் ஒளிந்து கிடப்பதாகவும், ஒவ்வொருவரும் தங்களது தனித்திறமைகளை வெளிகொண்டு வர வேண்டும் என்று கேட்டு கொண்டார். பின்னர் கல்வி தொலைக்காட்சி சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். 
  
Tags:    

மேலும் செய்திகள்