கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை : கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை

கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் விரைவில் அறிவிக்க வேண்டும் என அனைத்துக் கட்சிகளின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2019-08-21 04:51 GMT
கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் விரைவில் அறிவிக்க வேண்டும் என அனைத்துக் கட்சிகளின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கும்பகோணத்தில் நேற்றிரவு நடந்த கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், கோவி செழியன் மற்றும் அதிமுக, திமுக, காங்கிரஸ், தமாகா, இடதுசாரிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், வர்த்தக சங்கம், வழக்கறிஞர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.  புதிய மாவட்டம் அறிவிப்பது தொடர்பாக அமைச்சர்கள் துரைக்கண்ணு மற்றும் உதயகுமார் ஆகியோரை, நேரில் சந்தித்து வலியுறுத்துவதென முடிவு செய்யப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்