பொய் புகார் அளித்த பெண் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு
பெற்ற குழந்தையிடம் தவறாக நடந்து கொண்டதாக கணவருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பெற்ற குழந்தையிடம் தவறாக நடந்து கொண்டதாக கணவருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி, கணவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது.
சிறுமியை அழைத்து விசாரித்து, பொய் என கண்டறிந்த நீதிமன்றம், கணவருக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி அவர் மனுதாக்கல் செய்தார்.
இதை விசாரித்த நீதிபதி சிறுமி அளித்த வாக்குமூலத்தை சுட்டிகாட்டி
மனுதாரருக்கு எதிரான போக்ஸோ வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
குழந்தையை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்காக தாய், இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளது குறித்து அதிர்ச்சி தெரிவித்த நீதிபதி கணவரை பழிவாங்க பொய் புகார் அளித்த பெண்ணுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்த நினைப்பவர்களுக்கு இது பாடமாக அமையட்டும் என்றும் நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.