போலீஸ் என கூறி மக்களை ஏமாற்றி இளைஞர் கைது

வாக்கி டாக்கியுடன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் என கூறி மக்களை ஏமாற்றி, லட்சக்கணக்கான ரூபாய் வசூல் செய்த சென்னை இளைஞர் அரியலூரில் சிக்கியுள்ளார்.

Update: 2019-08-12 21:09 GMT
சென்னை நங்கநல்லூரை சேர்ந்தவர் சசிகுமார். இவர் பழவந்தாங்கல் காவல்நிலையத்தில் காவலர்களின் நண்பனாக இருந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் சென்ற ச‌சிக்குமார், தான் ஒரு குற்றப்பிரிவு துணை ஆய்வாளர் என்றும் குற்றவாளி ஒருவரை பிடிக்க வந்துள்ளதாகவும் அறிமுகம் செய்துகொண்டு அங்குள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார். போலீஸ் சீருடை, வாக்கி டாக்கியுடன் வந்த‌தால், விடுதி ஊழியர்களுக்கும் அவர் மீது சந்தேகம் ஏற்படவில்லை. 

இந்நிலையில், தன் அண்ணன் சுங்க வரி துறை அதிகாரியாக பணியாற்றி வருவதாக கூறிய ச‌சிக்குமார், அண்ணன் மூலம் குறைந்த விலையில் வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி தருவதாக கூறி, அங்குள்ள மக்களிடம் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கும் மேல் பணம் வசூல் செய்துள்ளார். இந்த நிலையில், அவர் மீது சந்தேகம் அடைந்த சிலர் கீழப்பழுவூர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்க போலீசார், ச‌சிக்குமாரை கைது செய்து சீருடை, தொப்பி, வாக்கி டாக்கி கருவிகளை பறிமுதல் செய்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்