கன்னியாகுமரியில் கனமழை பெய்து வருவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை
கன்னியாகுமரியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
கன்னியாகுமரியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால், நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமர படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. குளச்சல் துறைமுகத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த 2 கோடி ரூபாய் மதிப்பிலான ரூபன் என்பவரின் விசைப்படகு கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு மாயமானது. படகை தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். அழகியமண்டபம், தக்கலை, முட்டம், கடியப்பட்டனம், குறும்பனை உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.