கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் 2 லட்சம் பேருக்கு வீடுகளுடன் கூடிய வீட்டுமனைப் பட்டா

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் வீடுகளை இழந்த 2 லட்சம் பேருக்கு வீடுகளுடன் கூடிய இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

Update: 2019-08-01 12:45 GMT
கஜா புயலினால் நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல லட்சம் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டனர். இவர்களுக்காக பல்வேறு மறுவாழ்வு திட்ட பணிகள், தமிழக அரசு சார்பில் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, 2 லட்சம் வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை 60 ஆயிரம் பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளதாகவும், சொந்த இடம் இல்லாதவர்களுக்கு அரசு புறம்போக்கு இடத்தையோ அல்லது தனியாரிடம் இடத்தை வாங்கியோ 2 சென்ட் முதல் அதிகபட்சமாக 3 சென்ட் வரை இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இவற்றில், 300 சதுர அடி வரை தனி வீடு கட்டித் தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மறு கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித் தரப்பட உள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்