மருத்துவர் ஆக முடியாமல் தவித்த மாணவிக்கு உதவி : ரூ.50,000 வழங்கிய மாவட்ட ஆட்சியர் கந்தசாமி
திருவண்ணாமலை மாவட்டம் இரும்பேடு கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி நாகராஜ் தெய்வானை தம்பதியினரின் மகள் தீபா
திருவண்ணாமலை மாவட்டம் இரும்பேடு கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி நாகராஜ் தெய்வானை தம்பதியினரின் மகள் தீபா. இவர் கடந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பில், ஆயிரத்து 160 மதிப்பெண்கள் எடுத்தார். நீட் தேர்விலும், இந்தாண்டு 564 மதிப்பெண் எடுத்ததால், சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் பயில இடம் கிடைத்தது. ஆனால், பொருளாதார வசதி இல்லாத நிலையில், மருத்துவ படிப்பை தொடர முடியவில்லை. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட அலுவலகத்தில் தீபாவின் தாயார் தெய்வானை மாவட்ட ஆட்சியரிடம், மகளின் மருத்துவ படிப்புக்கு உதவுமாறு கேட்டு மனு அளித்தார்.
இதன் பேரில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி இரும்பேடு கிராமத்திற்கு சென்று தீபாவிற்கு தனியார் தொண்டு நிறுவனம் மூலம் மருத்துவ படிப்பிற்கு, ஐம்பதாயிரம் ரூபாயை, முதல் தவணையாக வழங்கினார்.