"வாட்ஸ் ஆப் மூலம் கூட மருத்துவர்களை கண்காணிக்கிறோம்"

"ஜூலை 30 மருத்துவமனை தினமாக கொண்டாடி வருகிறோம்"

Update: 2019-07-30 09:02 GMT
அரசு அறிவிப்பின் படி ஜூலை 30ஆம் தேதியை மருத்துவமனை தினமாக, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொண்டாடி வருவதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னை அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவமனையில், மருத்துவமனை தினம் கொண்டாடப்பட்டது. இதில் கர்ப்பிணி பெண்களுக்கு யோகா பயிற்சி மற்றும் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த பீலா ராஜேஷ் இவ்வாறு தெரிவித்தார். சுகப்பிரசவத்திற்கான முயற்சியை யோகா மூலம் பெறுவதற்கு தேவையான முயற்சிகளை செய்துள்ளதாகவும், மருத்துவர்களின் வருகை குறித்து வாட்ஸ் ஆப் மூலமாகவும் கண்காணிப்பதாக பீலா ராஜேஷ் தெரிவித்தார்.  
Tags:    

மேலும் செய்திகள்