அண்ணா நினைவு நாளன்று கோவில்களில் அன்னதானம் : தடை கோரிய வழக்கு 2 வாரத்துக்கு ஒத்திவைப்பு
தமிழகத்தில் பேரறிஞர் அண்ணா நினைவு நாளன்று, இந்து கோவில்களில் அன்னதானம் வழங்க தடை விதிக்க வேண்டும் என உத்தரவிடக் கோரிய மனு மீதான விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பேரறிஞர் அண்ணா நினைவு நாளன்று, இந்து கோவில்களில், கோவில் பணத்தைக் கொண்டு சிறப்பு அன்னதானம் வழங்க தடை விதிக்க வேண்டும் என்றும், மேலும், இலவச வேட்டி ,சேலைகளும் வழங்கக்கூடாது என உத்தரவிடக் கோரிய மனு மீதான விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பெரியநம்பி நரசிம்ம கோபாலன் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.