பூசாரிகளுக்கான ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

பூசாரிகளுக்கான ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பூசாரிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-29 10:20 GMT
கும்பகோணம்

கோவில் நகரமான கும்பகோணத்தில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த பூசாரிகளுக்கான ஊக்கத்தொகையை வழங்க வேண்டும் என்று ஏராளமான பூசாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

சிவகங்கை

இதேபோல், சிவகங்கையிலும் ஆட்சியர் அலுவலம் எதிரே கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில், பூசாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

கோவை

மேலும், கோவையிலும் மாத ஊக்க தொகை வழங்குவது, கிராமப்புற கோவில்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கிராம கோவில் பூசாரிகள் பேரவையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்