பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி : சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பலி
நாமக்கல் அருகே பாலியல் வன்கொடுமை செய்யபட்ட 15 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி மருத்துமனையில் உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அருகேயுள்ள சித்தூரணிப்பட்டியை சேர்ந்த 15 வயது சிறுமி, பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு, வீட்டில் இருந்துள்ளார். கடந்த 21 ஆம் தேதி இரவு 9 மணியளவில், வீட்டின் பக்கத்தில் உள்ள அறையில் தனியாக இருந்த போது, பக்கத்து வீட்டில் வசித்து வந்த மாமன் முறை உறவினரான ராஜசேகர் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதில், உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமி, கடந்த 25ஆம் தேதி ஆரம்ப சுகாதார நிலையத்திலும், பின்னர் சேலம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே, ராஜசேகரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.