கல்லூரி மாணவர்கள் பயங்கர மோதல் : 28 மாணவர்கள் கைது - சிறையில் அடைப்பு
திருச்சியில், தனியார் கல்லூரி ஒன்றில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக, 28 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மரத்தடியில் அமர்வது தொடர்பாக சீனியர் மற்றும் ஜூனியர் மாணவர்களுக்கிடையே, ஏற்கனவே பிரச்சினை இருந்து வந்த நிலையில், இந்த மோதல் வெடித்துள்ளது. இதில், 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக, 28 மாணவர்களை கைது செய்த போலீசார், காஜாமலை நீதிமன்றத்தில், அவர்களை ஆஜர்படுத்தினர். 7 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க, நீதிபதி உத்திரவிட்டதையடுத்து, 28 மாணவர்களும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.