சமஸ்கிருதம் விவகாரம் : காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும் - வைகோ
தமிழ் மொழியை விட சமஸ்கிருதம் பழமையானது என்று அச்சிட காரணமானவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.
பாடபுத்தகத்தில் தமிழ் மொழியை விட சமஸ்கிருதம் பழமையானது என்று அச்சிட காரணமானவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் அமைச்சர் செங்கோட்டையனின் நடவடிக்கையை பாராட்டுவதாகவும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.