கடலூரில் நான்கு வழி சாலை திட்டத்திற்கு பொது மக்கள் எதிர்ப்பு

குமராபுரம் சுற்றியுள்ள பகுதி மக்கள் நேற்று தங்கள் வீடுகள் கடைகள் மற்றும் சாலையோர மின்கம்பங்களில் கருப்பு கொடி கட்டி நான்கு வழி சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

Update: 2019-07-28 00:35 GMT
கடலூரில் இருந்து மருதாடு வரையிலான சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்காக, நெடுஞ்சாலைத் துறையினர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையில் இருந்து 17 மீட்டர் வரை இருபுறமும் குறியீடு போட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த குமராபுரம் சுற்றியுள்ள பகுதி மக்கள்  நேற்று தங்கள் வீடுகள், கடைகள் மற்றும் சாலையோர மின்கம்பங்களில் கருப்பு கொடி கட்டி நான்கு வழி சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஊர்வலமாக சென்று வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த நான்கு வழி சாலை திட்டத்தை ரத்து செய்து, கஷ்டம்ஸ் சாலையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்