திருவாடானை பகுதியில் நிலவும் தண்ணீர் பிரச்சினை - மாவட்ட ஆட்சியருடன் கருணாஸ் எம்.எல்.ஏ. ஆலோசனை
திருவாடானை பகுதியில் நிலவிவரும் தண்ணீர் பிரச்சினை தொடர்பாக அத்தொகுதி எம்.எல்.ஏ.கருணாஸ் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் நிலவிவரும் தண்ணீர் பிரச்சினை தொடர்பாக அத்தொகுதி எம்.எல்.ஏ. கருணாஸ்மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓராண்டு காலம் தொகுதிக்கு வராதது உண்மைதான் என்று கூறினார். முதலமைச்சர் உத்தரவுப்படி தாம் தொகுதிக்கு வந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருவதாக கருணாஸ் தெரிவித்தார்.