கால்நடை மருத்துவ படிப்பு சேர்க்கை : 7 பிரிவுகளில் 288 இடங்கள் நிரம்பின
கால்நடை மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் 288 இடங்கள் நிரம்பின.
கால்நடை மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் 288 இடங்கள் நிரம்பின. மாற்றுத்திறனாளிகள் பிரிவில் மட்டும் தகுதியான மாணவர்கள் இல்லாததால் 5 இடங்கள் காலியாக உள்ளதாக கால்நடை பல்கலை கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், காலியாக உள்ள ஐந்து இடங்களை நிரப்புவது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். எம்பிபிஎஸ் படிப்பில் இடம் கிடைக்காத மாணவர்கள், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கால்நடை மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.