டெல்லி, ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-25 11:16 GMT
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு  தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில், டெல்லி, ஜந்தர் மந்தரில் நடந்த இந்த போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.  ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தியுள்ள நிலையில், போராட்டத்திற்கு புதுச்சேரி முதல்வர்  நாராயணசாமி நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்