பாலாற்றில் உள்ள அணைகளை உயர்த்தும் ஆந்திர அரசு : தடுத்து நிறுத்த தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்ணையை உயர்த்தும் பணியில் ஆந்திர அரசு ஈடுபட்டுள்ளதால் திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்கள் பாலைவனம் ஆகும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Update: 2019-07-23 09:16 GMT
ஆந்திர மாநிலம் கங்குந்தி என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையை 40 அடியாக உயர்த்தும் பணியில் ஆந்திர அரசு ஈடுபட்டுள்ளது. அதேபோல், பொகிலிரேவில் உள்ள அணையின் உயரத்தையும் 40 அடியாக உயர்த்தும் பணிகளை ஆந்திர அரசு தற்போது துவங்கியுள்ளது. கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் அதனை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாலாற்றில் 21 இடங்களில் ஆந்திர அரசு தடுப்பணை கட்டியுள்ள நிலையில் அதனை ஒவ்வொன்றாக உயர்த்தி வருவதாகவும், இதனை தடுக்காவிட்டால் திருவண்ணாமலை, வேலூர் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டங்கள் பாலைவனம் ஆகும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்