ஆன்-லைன் ஆப் மூலம் வாடிக்கையாளர்களை ஏற்றி வந்ததாக புகார் : 38 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

சென்னை புறநகரில் 38 மோட்டார் சைக்கிள்களை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-07-17 22:51 GMT
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வாடகை கார்கள், ஆட்டோக்கள் போல ஆன் லைன் ஆப் முலமாக வாடகைக்கு மோட்டார் சைக்கிள்களில் ஆட்களை ஏற்றி சென்று கட்டணம் பெறுவதாக புகார்கள் வந்தன. இதுதொடர்பாக மீனம்பாக்கம், விமான நிலையம்,  பரங்கிமலை உள்ளிட்ட பகுதிகளில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள், வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள்களில் வந்த 100க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், ஆன் லைன் ஆப் முலமாக வாடிக்கையாளர்களை ஏற்றி வந்த 38 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்ததுடன், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே, இதுபற்றி தகவல் அறிந்து வந்த கால் டாக்சி டிரைவர்களுக்கும்,  மோட்டார் சைக்கிள் ஒட்டி வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்