நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர்கள் நியமனம் : நியமனம் குறித்து பதில் அளிக்க மத்திய அரசுக்கு நீதிபதி உத்தரவு

தமிழகத்தில் நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர்கள் நியமன பட்டியலை வெளியிட்ட மத்திய அரசின் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி மதுரையை சேர்ந்த ரவிக்குமார் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

Update: 2019-07-17 22:43 GMT
தமிழகத்தில் நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர்கள் நியமன பட்டியலை வெளியிட்ட மத்திய அரசின் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி மதுரையை சேர்ந்த ரவிக்குமார் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டு  முறையை பின்பற்றி பட்டியல் வெளியிட உத்தரவிடுமாறும் வலியுறுத்தி இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், மத்திய அரசின்  நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர்கள் நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பினார். மேலும், எந்த அடிப்படையில் நியமனம் நடைபெற்றுள்ளது என்பது குறித்து மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை  ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்