அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி இறப்பு : பயிற்சி செவிலியரை கைது செய்ய வலியுறுத்தல்

சென்னை கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் பயிற்சி செவிலியர் தவறான ஊசி போட்டதால் மூதாட்டி உயிரிழந்ததாக கூறி, உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-17 22:40 GMT
சென்னை கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் பயிற்சி செவிலியர்  தவறான ஊசி போட்டதால் மூதாட்டி உயிரிழந்ததாக கூறி, உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த அந்தோணியம்மாள் என்பவர், கருப்பையில் பாதிப்பு என கூறி கடந்த வாரம், திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் புதன்கிழமையன்று, பயிற்சி செவிலியர் ஊசி போட்ட சிறிது நேரத்திற்குள், அந்தோணியம்மாள் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டு பயிற்சி செவிலியரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்