"தண்ணீர் தரும் ரஜினி -அரசியலுக்கு வர வேண்டாம் என சொல்வதா" - எஸ்.வி. சேகர் கேள்வி

தண்ணீர் தரும் நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு வரவேண்டாம் என்று சிலர் சொல்வதாக எஸ்.வி. சேகர் தெரிவித்தார்

Update: 2019-07-17 22:26 GMT
தண்ணீர் தரும் நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு வரவேண்டாம் என்று சிலர் சொல்வதாக எஸ்.வி. சேகர் தெரிவித்தார். உயர்சாதி பிரிவினர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே பிராமணர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் எஸ்வி சேகர் மற்றும் பிராமணர் சங்கத் தலைவர் ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த எஸ்வி சேகர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஏன் கருத்தை கேட்கிறது என்று கேள்வி எழுப்பினார். மேலும், இப்படி செயல்பட்டால் தமிழக அரசுக்கே ஆபத்து வரும் என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்