வேலூர் : வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
வேலூர் மக்களவை தொகுதியில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் தனியார் கல்லூரியை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்
வேலூர் மக்களவை தொகுதியில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் தனியார் கல்லூரியை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். வேலூரில் ஆகஸ்ட் 5 ம் தேதி வாக்குப்பதிவும் வாக்கு எண்ணிக்கை 9-ம் தேதியும் நடைபெறுகிறது . வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்படவுள்ள சிசிடிவி கேமராக்கள், கொடுக்கப்பட உள்ள போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.